Sunday, September 30, 2012

மண்ணில் இந்த காதலன்றி .....


"மண்ணில்  இந்த  காதலன்றி  யாரும்  வாழ்தல்  கூடுமோ
எண்ணம்  கன்னி  பாவையின்றி  ஏழு  ஸ்வரந்தான்  பாடுமோ
பெண்மை  இன்றி  மண்ணில்  இன்பம்  ஏதடா "
     #உணர்ந்தவர்களால் மட்டுமே எழுதகூடிய வரிகள் .
     இந்த வரிகளை உங்களால் ஏற்று கொள்ள முடிந்தால்
     நீங்கள் வாழ்கையில்  ஒரு முறையேனும் காதலித்து இருக்கீறார்கள் ,

காதல்


ம் என்ற ஒற்றை வார்த்தையில் தொடங்குகின்றது காதலுக்கான பல்லவி

காதலில் என்றுமே முதல் எழுத்து பிழை ...
பிழை திருத்துகின்றாள்..
திருத்தத்தோடு எழுத்து பிழையும் காதலாகிறது ..
அவள்
கண்களும் இதழ்களும் தோழமை கட்சிகள்...
இதழ்கள் தயங்குவதை கண்கள் சொல்லி விடுகின்றன ....
கண்கள் மயங்கும் நேரம் இதழ்கள் பேச தொடங்குகின்றன

பல்லவிமுழுவதும் முத்தங்களால் நிரப்புகின்றேன்வணிக மயமாகி விட்ட வாழ்கையில்.. இந்தகாதலில் மட்டுமே கொடுக்கலும் வாங்கலும் கூட குறைய இருப்பது ஏற்று கொள்ள படுகின்றது

உணரப்படும் தருணமே காதல் வெளிப்படும் தருணத்தை விட அழகானது - பார்கிறேன்
அவள் முகம் இன்று

காமம் வெளியேறிய பின்பும்
என்னுள் காதல் இன்னும் மிச்சம் இருப்பதை உணர செய்கின்றேன்..
காதலில் அடுத்த பாடலுக்கான பல்லவி எழுத படுகின்றது

Saturday, September 15, 2012

பொருத்தம்

அவளை முதன் முதலில் சந்தித்த பொது
ஏன் பெற்றோர் எதிர் பார்த்த ஜாதகத்தை
தவிர வேறு எந்த பொருத்தமும் இருப்பதாக
தெரிய வில்லை..அடுத்து அடுத்து நிகழ்ந்த
சந்திப்புகளில் இன்னும் ஒரு பொருத்தம்
இருப்பது தெரிந்தது #இளையராஜா ..
அதன் பின்பு நிகழ்ந்த சந்திப்புகள் அவளுக்கும்
 எனக்கும் பிடித்தமான இளையராஜா பாடலில்
தொடங்கி ஒரு பாடலாக முடிகின்றது 

Wednesday, May 30, 2012

திருமணம்






மழையில் நனையும் நேரங்களில்

உடன் நனைய வரும் கால்களை விட

.
குடை கொண்டு வரும் கைகளை ரசிக்க ஆரம்பிக்கின்றேன்